காதலுக்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு.. காதல் ஜோடியின் விபரீத முடிவால் கண்ணீர் சோகம்..!

காதலுக்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு.. காதல் ஜோடியின் விபரீத முடிவால் கண்ணீர் சோகம்..!


Tiruppur Palladam Love Couple Suicide

இருவேறு சமூகத்தை சேர்ந்த காதல் ஜோடி பெற்றோர் எதிர்ப்பால் தற்கொலை செய்துகொண்டது. காதல் ஜோடியின் உடல் வாய்க்காலில் மிதந்து சென்றபோது காவல் துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம், பொங்கலூர் கொடுவாய் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவர் சொந்தமாக உணவகம் வைத்து நடத்தி வருகிறார். இவரின் மகன் நரேஷ் குமார். பொங்கலூர், ஆரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரின் மகள் பவிஷா (வயது 17).

நரேஷ் குமாருக்கும் - பவிஷாவிற்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது பின்னாளில் காதலாக மாறவே, இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், காதலுக்கு இருதரப்பிலும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

கடந்த 8 ஆம் தேதி பவிஷா மாயமான நிலையில், பெற்றோர் அவிநாசிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி, காதல் விவகாரம் என்பதால் இருவரையும் தேடி வந்துள்ளனர். 

Tiruppur

இந்நிலையில், இன்று காலை நேரத்தில் பொங்கலூர் பி.ஏ.பி வாய்க்கால் பகுதியில் ஆண் - பெண் என ஜோடியின் சடலம் தண்ணீரில் அடித்து செல்லப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், இருவரின் உடலையும் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். 

இருவரும் யார்? என்ற விசாரணை நடந்தபோது பவிஷா மற்றும் நரேஷ் குமார் என்பது உறுதியாகவே, காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஜோடி தற்கொலை செய்திருக்கலாம் என்பது உறுதியானது. இதுகுறித்து விசாரணை நடந்து வரும் நிலையில், அப்பகுதியில் இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திஉள்ளது.