திமுக பிரமுகரை பளார்., பளாரென அறைந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி.. ஊராட்சி அலுவலகம் முன் பகீர் சம்பவம்.!
புகைப்படம்: நா.த.க பிரமுகர் சுதாகர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி, நிம்மியம்பட்டு ஊராட்சியை சேர்ந்தவர் திமுக பிரமுகர் ஞானம். இவர் தனது தங்கையின் பெயரில் பணிதல் பொறுப்பாளராக வேலைபார்த்து வந்துள்ளார்.
இதனிடையே, ஞானத்தை பணிமாற்றம் செய்யக்கூறி, அப்பகுதியை சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சுதாகர் கோரிக்கை வைத்து வந்துள்ளார்.
கிராமசபை கூட்டத்தில் அதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த ஞானம் சுதாகருக்கு செல்போனில் தொடர்புகொண்டு மிரட்டி, அவதூறாக பேசியுள்ளார்.
இதனிடையே, ஊராட்சி அலுவலகத்திற்கு வந்த சுதாகர் - ஞானம் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், வாய்த்தகராறு கைகலப்பில் முடிந்தது. இருவரையும் அங்கிருந்தவர்கள் விலக்கி சமாதானம் செய்தனர்.
இருவரின் சண்டையை நேரில் பார்த்த ஊராட்சிமன்ற தலைவர் எழிலரசியின் கணவர் வெங்கடேசன், இருவரையும் அங்கிருந்து செல்லக்கூறி அறிவுறுத்தியுள்ளார்.
இருதரப்பு ஆதரவாளர்களும் அங்கு குவிந்து வாக்குவாதம் செய்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சுதாகரை நோக்கி, ஞானம் "நீயெல்லாம் கஞ்சா விக்கிறவன். உனக்கு நான் என்ன பதில் சொல்லணும்?" என கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சுதாகர் ஞானத்தின் கன்னத்தில் பளார் பளாரென அறைந்தார். அடிவாங்கிய ஞானம் அதிர்ந்துபோய் அமர்ந்துவிட, அங்கு பெரும் பரபரப்பு உண்டானது.
தற்போது இருதரப்பும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதியாகியுள்ள நிலையில், ஆலங்காயம் காவல் துறையினர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.