அதிர்ச்சி.. மருத்துவம் படிக்காத நபர் செலுத்திய ஊசியால் 14 வயது சிறுவன் மரணம்; நெஞ்சை பதறவைக்கும் சோகம்.! மக்களே கவனம்.!

அதிர்ச்சி.. மருத்துவம் படிக்காத நபர் செலுத்திய ஊசியால் 14 வயது சிறுவன் மரணம்; நெஞ்சை பதறவைக்கும் சோகம்.! மக்களே கவனம்.!


tirupattur-vaniyambadi-child-died

File Photo

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பகுதியை சேர்த்த சிறுவன் சூரிய பிரகாஷ் (வயது 14). கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த சிறுவனுக்கு நேற்று காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து, சிறுவனின் பெற்றோர் மகனை மருத்துவமனைக்கு அழைத்து சென்று இருக்கின்றனர். அப்பகுதியில் மருத்துவம் படிக்காத கோபிநாத் என்பவர் மருத்துவமனை வைத்து நடத்தி வந்துள்ளார். 

TirupatturFile Photo

இந்நிலையில், சிறுவனுக்கு கோபிநாத் காய்ச்சலுக்கான ஊசி செலுத்தியதாக கூறப்படுகிறது. ஊசி செலுத்தப்பட்ட சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த விஷயம் தொடர்பாக சூர்யா பிரகாஷின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், உள்ளூர் மக்கள் விபரம் தெரிந்தும் இவ்வாறாக அலட்சியமாக செயல்பட வேண்டாம். தகுந்த மருத்துவரை அழைத்து சிகிச்சை மேற்கொள்ளுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.