மலைக்கிராம மக்களுக்கு சொந்த செலவில் உதவி செய்த பாஜகவினர் விரட்டியடிப்பு; திமுகவினர் சர்ச்சை செயல்.!

மலைக்கிராம மக்களுக்கு சொந்த செலவில் உதவி செய்த பாஜகவினர் விரட்டியடிப்பு; திமுகவினர் சர்ச்சை செயல்.!


Tirupattur Vaniyambadi BJP DMK Fight 

 

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி, நெக்னாமலை மலைக்கிராமத்தில் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் சுதந்திரம் அடைந்து 76 ஆண்டுகள் ஆகியும் சாலை, மருத்துவம் உட்பட அடிப்படை வசதி கூட இல்லை.

இந்நிலையில், பாஜக கட்சியைச் சேர்ந்த இளைஞர்கள் தங்களது சொந்த பணத்தில் நியாயவிலைக்கடை விற்பனையாளர் மற்றும் ஊழியர்களுடன் சேர்ந்து தங்களால் இயன்ற அரிசி உட்பட பொருட்களை கிராமத்து மக்களுக்கு வழங்கி இருக்கின்றனர். 

Tirupattur

இந்த தகவல் அறிந்த திமுகவினர் பாஜகவினரை தடுத்து நிறுத்தி வாக்குவாதம் செய்துள்ளனர். மேலும், அவர்கள் மக்களுக்கு பொருட்களை வழங்க விடாமல் விரட்டி அடித்ததால், தங்களுக்கு ஏதேனும் பொருட்கள் கிடைக்கும் என வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.