23 வயது இளைஞனால் 19 வயது இளம்பெண்ணின் வாழ்க்கையில் நடந்த பெரும்சோகம்.! திருமணமாகாமல் கர்ப்பமாகி, வீட்டில் பிரசவம்: பறிபோன உயிர்..!

23 வயது இளைஞனால் 19 வயது இளம்பெண்ணின் வாழ்க்கையில் நடந்த பெரும்சோகம்.! திருமணமாகாமல் கர்ப்பமாகி, வீட்டில் பிரசவம்: பறிபோன உயிர்..!


Tirunelveli Manur Women Delivery at Home Due to Love Pregnancy Child Died 

 

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மானூர், அருகேயுள்ள கிராமத்தில் 19 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவர் 12ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். 

இதனிடையே, இளம்பெண்ணிற்கும் - உறவினரான 23 வயது இளைஞருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இளைஞர் உறவினரின் வீட்டிற்கு வந்துசென்றபோது, 19 வயது பெண்ணுடன் பழக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். 

இருவரும் காதல் வயப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் காதல் ஜோடி தனிமையில் இருந்துள்ளது. இதற்கு பின் அவ்வப்போது இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். 

இளம்பெண் இதனால் கர்ப்பமாகிவிடவே, ஊருக்கு விஷயம் தெரியக்கூடாது என பெண்ணின் உறவினர்கள் வீட்டிலேயே அவருக்கு பிரசவம் பார்த்துள்ளனர். அச்சமயம் ஆண் குழ்ந்தை இறந்து பிறந்துள்ளது.

பெண்ணும் அதிக இரத்தப்போக்கு காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். 

சம்பவம் குறித்து தகவல் அறிந்த மானூர் காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணின் காதலனுக்கு வலைவீசப்பட்டுள்ளது.