மதப்பிரச்சாரம் செய்ய இந்து மக்கள் வாழும் பகுதிக்குள் சிக்கிய ஜோடி.. விரட்டியடித்த மக்கள்.!

மதப்பிரச்சாரம் செய்ய இந்து மக்கள் வாழும் பகுதிக்குள் சிக்கிய ஜோடி.. விரட்டியடித்த மக்கள்.!


thoothukudi-villagers-against-region-conversion-peoples

இந்து சமய மக்கள் வாழும் பகுதிக்குள் மதப்பிரச்சாரம் செய்ய வந்தவர்கள் விரட்டி அடைக்கப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள செபத்தையாபுரம் பகுதியில் இந்துக்கள் அதிகம் வசித்து வரும் தெரு உள்ளது. சம்பவத்தன்று தெருவுக்குள் ஆண் - பெண்ணாக இருவர் வந்து துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து கொண்டு இருந்தனர். 

அந்த சமயத்தில், அங்கு இருந்த இளைஞர்கள் அவர்களை வழிமறித்து நீங்கள் யார்? என விசாரணை செய்துள்ளனர். அப்போது, அவர்கள் மதப்பிரச்சாரம் செய்வது உறுதியானது. கூட்டாம்புளி கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதும் உறுதியானது. 

Thoothukudi

இதனால் மதப்பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள், அங்கு வந்திருந்தவர்களை விரட்டினர். மேலும், அவர்கள் கையில் இருந்த துண்டு பிரசுரங்கள், புத்தகங்கள் போன்றவற்றை பிடிங்கி வீசியெறிந்தனர். இதனால் பரபரப்பை உணர்ந்தவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.