"அழக்கூட விடமாற்றங்க" - பெண்களுக்கு வில்லனாக மாறிய முத்துக்குமரன்.. களேபரமாகும் பிக் பாஸ் வீடு.!
ஒருதலைக்காதலை ஏற்க மறுத்த 12ம் வகுப்பு மாணவி கொலை முயற்சி; தேர்வெழுதிவிட்டு வரும்போது கொடூரம்..!
அரசு பொதுத்தேர்வை எழுதிவிட்டு வீட்டிற்கு செல்ல முற்பட்ட மாணவியை ஒருதலைக்காதலன் என்ற கொடூரன் கொலை செய்ய முயற்சித்த பயங்கரம் நடந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கீழ செக்கரக்குடி பகுதியில் வசித்து வரும் மாணவி தங்கமாரி. இவர் அப்பகுதியில் இருக்கும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று வருகிறார்.
இவர் இன்று பள்ளியில் நடைபெற்ற இறுதி பொதுத்தேர்வை எழுதிவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அந்த சமயம், மாணவி தங்கமாரியை ஒருதலையாக காதலிக்கிறேன் என்ற பெயரில், சோலையப்பன் என்ற இளைஞர் மாணவியிடம் பேச முயற்சித்துள்ளார்.
மாணவி அங்கிருந்து செல்ல முற்படவே, ஆத்திரமடைந்த சோலையப்பன் மனைவியை சரமாரியாக அரிவாளால் வெட்டி இருக்கிறார். இதனால் அவரின் தலை & கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் சோலையப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.