சேலத்தில் நடந்த ஜாதிய விவகாரத்தை விசிக கண்டுகொள்ளாதது ஏன்?.. நடிகை கஸ்தூரி பரபரப்பு குற்றச்சாட்டு..!
சாவிலும் இணைபிரியாத கணவன் - மனைவி..! மனைவி இறந்த அடுத்த கணமே உயிரை விட்ட கணவன்..!
சாவிலும் இணைபிரியாத கணவன் - மனைவி..! மனைவி இறந்த அடுத்த கணமே உயிரை விட்ட கணவன்..!

திருவாரூர் மாவட்டம் ஓவரூரை சேர்ந்தவர் 60 வயதாகும் நாகராஜ். இவரது மனைவி இந்திரா வயது 55 . 40 வருடத்திற்கு முன் திருமணம் செய்துகொண்ட இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை என கூறப்படுகிறது. தங்களுக்கு குழந்தை இல்லாவிட்டாலும், கணவன் - மனைவி இருவரும் ஒருவருக்கு ஒருவர் பாசத்துடன் இருந்து வந்துள்ளனர்.
எங்கு சென்றாலும் தம்பதியினர் இருவரும் ஒன்றாகவே செல்வது, எந்த ஒரு சண்டையும் இல்லாமல் ஒற்றுமையான வாழ்க்கை, இப்படி சந்தோசமாக சென்றுகொண்டிருந்த நேரத்தில் சமீபத்தில் இந்திராவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தீவிர சிகிச்சை நடைபெற்றும் சிகிச்சை பலனின்றி இந்திரா மரணமடைந்துள்ளார். மனைவி இறந்த செய்தி கேட்டு நாகராஜ் மயக்கம் போட்டு விழுந்துள்ளார். சாதாரண மயக்கம் என அனைவரும் நினைத்த நிலையில் நாகராஜ் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியது அனைவரையும் பெரும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
இறப்பிலும் கணவன் மனைவி இருவரும் பிரியாமல் ஒன்றாக இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.