இரவோடு இரவாக பிணத்தை.. தூக்கிச் சென்று விபரீதம்.! விரைந்த போலீஸ் அதிரடி நடவடிக்கை.!



thiruvannamalai old women murdered

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செங்கம் அருகே வாசுதேவன்பட்டு கிராமத்தில் குமாரி என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவர் வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கும் தொழிலை செய்து வந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த சம்பத் என்பவர் குமாரிடம் 2 லட்சம் ரூபாய் பணம் வட்டிக்கு வாங்கியுள்ளார். 

சம்பத் அந்த பணத்தை திருப்பிக் கொடுக்காமல் குமாரியை அலைக்கழித்து வந்துள்ளார். சிறுக சிறுக பணத்தை மிக கால தாமதமாக கொடுத்து அசலை ஒரு வழியாக கட்டியுள்ளார். இந்த நிலையில், குமாரி சம்பத்தை தனது வீட்டிற்கு வரச் சொல்லி வட்டி பணத்தை கேட்டு கராராக பேசியுள்ளார். அப்போது, தன்னால் வட்டி கட்ட முடியாது என்று சம்பத் வாக்குவாதம் செய்துள்ளார். 

thiruvannamalai

இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த சம்பத் அருகில் கிடந்த கருங்கல்லை எடுத்து குமாரியை தலையில் தாக்கியுள்ளார். இதில், படுகாயமடைந்த குமாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து இருக்கிறார். இந்த விஷயம் வெளியில் தெரியாமல் உடனடியாக குமாரியின் கை, கால்களை கட்டி சாக்கு முட்டையில் போட்டு இரவு நேரத்தில் அந்த முட்டையை எடுத்துக் கொண்டு அருகில் இருந்த கிணற்றில் கொண்டு வீசியுள்ளார். 

இதையும் படிங்க: அடப்பாவமே... வாயில் வெடி வைத்து இளம் பெண் கொலை.!! கள்ளக்காதலன் வெறிச்செயல்.!!

சில நாட்கள் கழித்து கிணற்றிலிருந்து துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து போலீசுக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில் சம்பத் கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து, அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: #கடலூர் : பிணத்தை வாங்க கூட ஆளில்லாமல் போன பரிதாபம்.! நகை, பணத்துடன் தனியே வசித்த நபர்.!