#கடலூர் : பிணத்தை வாங்க கூட ஆளில்லாமல் போன பரிதாபம்.! நகை, பணத்துடன் தனியே வசித்த நபர்.!



old men died alone in cuddalore

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் முத்தையா நகரில் பலராமன் (65 வயது) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு கட்டிட பொறியாளர் ஆவார். இவர் தன் மனைவி மற்றும் பிள்ளைகளை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். சில நாட்களுக்கு முன் பலராமனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அவர் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். 

இந்த நிலையில், நேற்று காலை பலராமனின் உடல்நிலை மோசமாகி அவர் உயிரிழந்துள்ளார். அவரது உடலை பெற்றுக் கொள்ள யாரும் முன்வரவில்லை என்பதால், மருத்துவர்கள் சார்பில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பலராமனின் வீட்டிற்கு அக்கம் பக்கத்தில் விசாரித்துள்ளனர். 

Old men

மேலும், அவரது வீட்டில் சோதனை செய்த போது அங்கிருந்து ஒன்றரை லட்சம் ரூபாய் பணம், 75 பவுன் தங்க நகைகளும் கிடைக்கப்பெற்றது. இதனை தொடர்ந்து, போலீசார் அந்த பணத்தை மீட்டு காவல் நிலையத்திற்கு எடுத்து வந்தனர். 

இதையும் படிங்க: #அரியலூர் : போலிஸாரை எதிர்த்து, ராணுவவீரர் போராட்டம்.. கலெக்டர் ஆஃபீஸ் முன் தர்ணா.!

அக்கம் பக்கத்தில் விசாரித்ததில் அவருக்கு மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது. ஆனால், அவர்கள் எங்கே வசிக்கிறார்கள் என்பது தெரியவில்லை. சொத்து, பணம் அனைத்தும் இருந்தும் அவரது உடலை வாங்கக்கூட யாரும் வராத நிலை அப்பகுதியில் பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: "தலை முடி உதிர்வதால் சோகம்... " கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை.!!