ஒரு நைட்டுக்கு 25,000.! அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்.!

ஒரு நைட்டுக்கு 25,000.! அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்.!



thiruvannamalai-deepam-devotees-were-shocked-by-the-hot

மிக விரைவில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படவிருக்கிறது. இதன் காரணமாக, திருவண்ணாமலையிலிருக்கின்ற விடுதிகளின் கட்டணம் யாரும் எதிர்பாராத அளவுக்கு அதிகரித்திருக்கிறது என பக்தர்கள் குற்றம் சுமத்தியிருக்கிறார்கள். 

ஆண்டுதோறும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த வருடம் கார்த்திகை தீபத் திருவிழாவின் கொண்டாட்டத்திற்காக அனைத்து வித ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.

Karthigai Deebam

வரும் 17ஆம் தேதி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை தீபத் திருவிழாவின் கொடியேற்றம் நடைபெறவுள்ளது எனவும், இதனைத் தொடர்ந்து, 10 தினங்கள் தீபத் திருவிழா நடைபெறும் என்றும் ஆலய நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

அதோடு வரும் 23ஆம் தேதி மகா தேரோட்டம் நடைபெறவுள்ளது. அதன் பின் விழாவில் நிறைவு நாளான 26 ஆம் தேதி பரணி தீபம் ஏற்றப்படுகிறது. அன்று மாலை 6 மணிக்கு, 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Karthigai Deebam

திருவண்ணாமலையில் எதிர்வரும் 25 மற்றும் 26 போன்ற தேதிகளில் தங்கும் விடுதிகளில் அறைகளின் கட்டணம் வசதிகளுக்கு ஏற்றவாறு 25000 ரூபாய் வரையில் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. வெளியூரிலிருந்து வரும் பக்தர்களிடையே இது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சாதாரண தினங்களில், 1000 ரூபாய் முதல், 3000 ரூபாய் வரையில் விடுதி கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. ஆனால் திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, 10 முதல் 15 மடங்கு வரையில் விடுதி கட்டணங்கள் அதிகமாகயிருப்பதாக பக்தர்கள் புகார் வழங்கியிருக்கிறார்கள். இந்த விஷயத்தில் தமிழக அரசு நேரடியாக தலையிட்டு கட்டணங்களை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.