தமிழகம்

பிரியாணி கேட்ட கணவர்! செய்து தர மறுத்த மனைவி! கோபத்தில் கணவன் செய்த கொடூர செயல்.

Summary:

Thiruvallur

திருவள்ளூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள கொத்தங்குடியை சேர்ந்தவர் சித்திரைவேல் - கற்பகம் தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி ஒன்பது ஆண்டுகள் ஆகியுள்ளது. இவர்களுக்கு 8 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. 

இந்நிலையில் குடிபழக்கத்திற்கு அடிமையான சித்திரைவேலு தினமும் குடித்து விட்டு வந்து தனது மனைவியுடன் சண்டையிடுவதை வழக்கமாக கொண்டவர். 

ஒரு நாள் சித்திரைவேல் தனது வீட்டிற்கு அருகில் உள்ள தங்கையின் வீட்டில் தங்கை பிரியாணி சாப்பிடுவதை பார்த்து விட்டு வந்துள்ளார். உடனே தனது மனைவியிடம் தனது தங்கையிடம் பிரியாணி வாங்கி வருமாறு சண்டையிட்டுள்ளார். 

அதற்கு கற்பகம் மறுத்துள்ளார். அதனை அடுத்து சித்திரைவேல் தனது வீட்டில் பிரியாணி செய்து தரவேண்டும் என்று கேட்டுள்ளார். வீட்டில் பிரியாணி செய்வதற்கான பொருட்கள் இல்லாததால் செய்து தர மறுத்துள்ளார் கற்பகம். 

அதனால் கோபமான சித்திரைவேல், கற்பகத்தின் மேல் மண்ணெண்ணெயை ஊற்றி அவரை எரித்துள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கற்பகத்தை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

மேலும் சித்திரைவேலுவை கொலை முயற்சியின் பெயரில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 


Advertisement