பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது!! சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை விமர்ச்சித்த திருமா!!

பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது!! சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை விமர்ச்சித்த திருமா!!


Thirumavalavan about Rajinikanth

மிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தமிழில் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து சூப்பர் ஸ்டார் எனும் அந்தஸ்து பெற்றிருக்கிறார்.

ஆரம்ப காலகட்டத்தில் தனது சினிமா வாழ்க்கையில் கஷ்டங்களை சந்தித்து இருந்தாலும் தற்போது தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை நிலை நாட்டியுள்ளார். இது போன்ற நிலையில், தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், தமன்னா போன்றவர்கள் நடிப்பில் சமீபத்தில் வெளியானது 'ஜெயிலர்' திரைப்படம். 

இப்படத்தின் மீது பல விதமான விமர்சனங்களை ரசிகர்கள் எடுத்து வைத்தாலும் படம் வெற்றி கொடிகட்டி வருகிறது. இந்த நிலையில், ஜெயிலர் திரைப்படத்திற்கு பின்பு இமய மலைக்கு சென்றிருந்த ரஜினிகாந்த் சமீபத்தில் உத்தரப்பிரதேச முதல்வர்  யோகி ஆதித்யநாத் அவர்களை சந்திக்க சென்றிருந்தார். அப்போது அவரது காலில் விழுந்து வணங்கினார். 

thirumavalavan

இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு பேசி வருகிறார்கள். இந்த சம்பவம் மிகவும் சர்ச்சையாக மாறி வளம் வருகிறது.

இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன் கூறியதாவது: - ரஜினிகாந்தை தமிழ்நாட்டு மக்கள் உயர்வாக நினைத்துக் கொண்டிருந்தார்கள். தற்போது அவர் எப்படிப்பட்டவர் என்பதை ஒரே நிகழ்வில் காண்பித்துள்ளார்.

பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது. இந்த மாதிரியானவர்களிடமிருந்து ஒட்டுமொத்த இந்தியாவையும் காப்பாற்ற வேண்டும். ஒரு வேலை ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்து, ஆட்சி அமைத்தால். யோகி ஆட்சி போல் தான் இருக்கும் என்று விமர்சித்துள்ளார்.