அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
திடீரென உள்வாங்கிய திருச்செந்தூர் கடல்.. பதறிப்போன பக்தர்கள்.!
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் கடற்கரையில், நேற்று ஏராளமான பக்தர்கள் குவிந்து இருந்தனர். அந்த சமயத்தில் திடீரென கடல் சில மீட்டர் தூரம் அளவில் உள்வாங்கியுள்ளது.
இதனால் கடலில் இருந்த பாறைகள் வெளியே தெரியவே, பதறிப்போன பக்தர்கள் அதிர்ச்சியுடன் கடலில் இருந்து கரைக்கு திரும்பினர். இந்நிலையில், இன்றும் சுமார் 200 மீட்டர் தூரம் கடல் உள்வாங்கியுள்ளது.

திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள், கடல் உள்வாங்கியதால் அதிர்ச்சியுடன் கரைக்கு திரும்பினர். மேலும், கடல் உள்வாங்கியதற்கான காரணம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.