உடலுறவுக்கு பின் கட்டாயம் செய்யக்கூடாத சில விஷயங்கள்! என்ன தெரியுமா? இதோ! - TamilSpark
TamilSpark Logo
தமிழகம் மருத்துவம் லைப் ஸ்டைல் 18 Plus

உடலுறவுக்கு பின் கட்டாயம் செய்யக்கூடாத சில விஷயங்கள்! என்ன தெரியுமா? இதோ!

தாம்பத்தியம் என்பதும் தாம்பத்திய உறவு என்பதும் மிகவும் புனிதமான ஓன்று. உயிரினங்கள் அனைத்தும் தங்களது இனப்பெருக்கத்திற்காக உறவில் ஈடுபடுகின்றனர். மனிதனை தவிர மற்ற உயிரினங்கள் குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே உறவில் ஈடுபடுகின்றன. ஆனால், மனிதர்களாகிய நமக்குத்தான் இதன் விசயத்திற்கு நேரம் காலம் பார்ப்பது இல்லை.

பொதுவாக உறவை ஆரம்பிப்பதற்கு முன்பு எப்படி ஒருசில வேலைகளை செய்யவேண்டுமோ அதேபோல, உறவுக்கு பிறகும் ஒருசில வேலைகளை நாம் செய்யவேண்டும்.

1 . உடனே எழுந்திருப்பது
உறவுக்குப்பின் படுக்கையில் இருந்து உடனே எழுந்து போவதை நிறுத்தவேண்டும். அடுத்த கணமே படுக்கையில் இருந்து எழந்து செல்வது ஆண்களின் வழக்கம். இப்படி செய்வதால் தம்பதியினரிடம் நெருக்கம் நீடிக்காது. எனவே உறவுக்கு பின் சிறிது நேரம் துணையுடன் விளையாடவேண்டும்.

2 . குளிப்பது
உறவு முடிந்த உடனே குளிக்க செல்வது ஆண், பெண் இருவரிடமும் உள்ள பழக்கம். இதனை முதலில் குறைத்துக்கொள்ள வேண்டும். உறவுக்கு பிறகு சிறிது நேரம் மனைவி அல்லது துணையுடன் மனம் விட்டு பேசி விட்டு பேச வேண்டும். இதனால் உறவில் மகிழ்ச்சி நீடிக்கும்.

3 . வீட்டைவிட்டு வெளியேறுவது
உறவு முடிந்து சிலமணி நேரம் துணையுடன் வீட்டில் நேரம் செலவிட வேண்டும். அதேபோல் வீட்டில் இருந்து வெளியேறும் பட்சத்தில் கட்டாயம் குளித்துவிட்டு செல்ல வேண்டும்.

4 . உனவு மற்றும் மருந்து மாத்திரை
உறவுக்கு முடித்த பிறகு வயிறு முட்ட சாப்பிடக் கூடாது. பால் அளவாக குடிக்கலாம். உடனடியாக மருந்து மாத்திரைகளையும் எடுத்துக் கொள்ளக் கூடாது. உடலுக்கு கடுமையான வேலை கொடுக்க கூடாது.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo