தூத்துக்குடியில் பரபரப்பு.. தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்.. சிக்கிய உருக்கமான கடிதம்..!There is excitement in Tuticorin.. a young woman who committed suicide.. a heartwarming letter stuck..!

தூத்துக்குடி மாவட்டம் சிலுவை பட்டி சுனாமி காலனி பகுதியில் வசித்து வருபவர் நடராஜன்‌. இவருக்கு அபிராமி என்ற மகள் ஒருவர் உள்ளார். இவர் தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள தனியார் நூற்பாலையில் வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அபிராமி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இந்த தற்கொலை தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார் அபிராமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

young girl

மேலும் அபிராமி தற்கொலை செய்து கொண்ட இடத்தில் கடிதம் ஒன்று இருந்ததையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். அந்த கடிதத்தில் தான் தற்கொலை செய்து கொண்டதற்கு காரணம் இவர்தான் என்று எழுதப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து அபிராமியின் தற்கொலைக்கு காரணமான நபரை கைது செய்யும் வரை அபிராமி உடலை வாங்க மாட்டோம் என்று கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனைதொடர்ந்து அபிராமியின் தற்கொலைக்கு காரணமான நபர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இளம் பெண் ஒருவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.