தமிழகம்

குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை.. கயவனை கட்டிவைத்து தோலுரித்த பொதுமக்கள்.. தேனியில் சம்பவம்.!

Summary:

குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை.. கயவனை கட்டிவைத்து தோலுரித்த பொதுமக்கள்.. தேனியில் சம்பவம்.!

தெருவில் விளையாடிக்கொண்டு இருந்த குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காமுகனை பொதுமக்கள் கம்பத்தில் கட்டிவைத்து நொறுக்கிய சம்பவம் நடந்துள்ளது. 

தேனி மாவட்டத்தில் உள்ள வடுகட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன். இவர் வேலைக்கு செல்லாமல், அப்பகுதியில் மதுபோதையில் சுற்றி திரிவது வழக்கம் என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில், பாண்டியன் தெருவில் விளையாடிக்கொண்டு இருந்த குழந்தைகளுக்கு மிட்டாய் வழங்குவதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், பாண்டியனை பிடித்து கம்பத்தில் கட்டிவைத்து அடித்து நொறுக்கினர். 

ஆத்திரம் தீர பாண்டியனை கிராமமே சேர்ந்து அடித்து நொறுக்கி, பின்னர் காவல் துறையினருக்கு தகவலை தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், பாண்டியனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்தனர். 

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, சிகிச்சைக்கு பின்னர் பாண்டியனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். 


Advertisement