லாரி மோதி அண்ணன்-தங்கை உடல் நசுங்கி பரிதாப பலி.. தேனியில் நெஞ்சை பதறவைக்கும் சோகம்.!Theni Uthamapalayam Children Died Accident

 

உறவினருடன் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த அண்ணன்-தங்கை லாரி மோதி பலியான சோகம் நடந்துள்ளது. 

தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரின் மனைவி சரவண பிரியா.

தம்பதிகளுக்கு 12 வயதுடைய கார்த்திகேயன், 8 வயதுடைய மேகாஸ்ரீ என 2 குழந்தைகள் இருந்தனர். தம்பதியின் உறவினர் சரவண வேல். 

சம்பவத்தன்று குழந்தைகள் இருவரும் உறவினர் சரவண வேலுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். 

Theni

அப்போது, தேனி நேரு சிலை சிக்னல் பகுதியில் சென்றபோது, இவர்கள் பயணித்த இருசக்கர வாகனத்தின் மீது பின்னால் வந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. 

சரவனவேல் தூக்கி வீசப்பட்ட நிலையில், சிறுவர்கள் இருவரும் லாரி சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக பலியாகினர். 

இந்த விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் குறித்து விசாரிக்கையில், அவர் கேரளாவை சேர்ந்த ராமர் என்பது தெரியவந்தது. அவரை காவல் துறையினர் கைது செய்தனர்.