தமிழகம்

காதலை ஏற்க மறுத்ததால் பயங்கரம்.. காதலியின் அந்தரங்க புகைப்படத்தை பரப்பிவிட்ட காதலன்.!

Summary:

காதலை ஏற்க மறுத்ததால் பயங்கரம்.. காதலியின் அந்தரங்க புகைப்படத்தை பரப்பிவிட்ட காதலன்.!

தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டியில் வசித்து வருபவர் கோபிநாதன் (வயது 23). இவர் கூலித் தொழிலாளி ஆவார். கடந்த 2017 ஆம் வருடம் கோவையில் உள்ள கல்லூரியில் பயின்று வந்துள்ளார். அப்போது, அக்கல்லூரியில் பயின்று வந்த 22 வயது மாணவியுடன் பழகி வந்துள்ளார். 

இந்த பழக்கமானது இவர்களுக்குள் பின்னாளில் காதலாக மாறவே, இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், காதல் ஜோடியிடையே கடந்த சில மாதமாகவே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் பேசாமல் இருந்து வந்துள்ளனர். 

இவ்வாறான சூழ்நிலையில் கோபிநாதன், இளம்பெண்ணை பேச வற்புறுத்தி வந்துள்ளார். அதனை மாணவி கண்டுகொள்ளாமல் இருந்த நிலையில், என்னுடன் நீ பேசவில்லை என்றால் ஆபாச வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திடுவேன் என்று மிரட்டி இருக்கிறார். 

அச்சப்படாத மாணவி உன்னால் இயன்றதை பார்த்துக்கொள் என்று கூறவே, கோபிநாதன் சமூக வலைத்தளத்தில் ஆபாச வீடியோவை பதிவு செய்துள்ளார். இதனையடுத்து, பெண்மணி கோயம்புத்தூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் கோபிநாதனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 


Advertisement