தினமும் பெற்றோர்கள் செய்த காரியம்.. பச்சிளம் பிஞ்சு மனவேதையில் எடுத்த முடிவால் விபரீதம்.!Theni Bodinayakkanur Minor Girl Janani Suicide due to Parents Fight Everyday She Feeling Sad

பெற்றோர்களின் சண்டையால் மனதுடைந்த 14 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்ட பெரும் சோகம் போடியில் நடந்துள்ளது.

தேனி மாவட்டத்தில் உள்ள போடி மின்வாரிய அலுவலகத்திற்கு அருகேயுள்ள குடியிருப்பை சார்ந்தவர் இருளாண்டி. இவரது மனைவி விஜயா. இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். 

2 மகள்களில் மூத்த மகள் ஷாலினிக்கு திருமணம் முடிந்துவிட்ட நிலையில், இரண்டாவது மகள் ஜனனி (வயது 14) போடியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார். 

இந்நிலையில், இருளாண்டி - விஜயா தம்பதிகள் அவ்வப்போது குடும்பத்தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர். வீட்டில் இருந்த சிறுமி ஜனனிக்கு பெற்றோர்களின் சண்டையால் விரக்தி ஏற்பட்டு, மனதுடைந்து காணப்பட்டுள்ளார். 

Theni

பெற்றோர்களின் சண்டை தொடர்ந்துகொண்டே வந்ததால், விரக்தியின் உச்சிக்கு சென்ற சிறுமி வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.  

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்து வந்த போடி காவல் துறையினர், சிறுமியின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சிறுமி தற்கொலைக்கு முன்னதாக எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.