மாட்டுவண்டியில் மோதி நண்பர்கள் 2 பேர் பரிதாப பலி.. மூணாறு சென்று வருகையில் சோகம்.!Theni Bodi Accident Friends Died

தேனி மாவட்டத்தில் உள்ள போடி, புதுக்காலனி பகுதியில் வசித்து வருபவர் பிரதீப் குமார் (வயது 27). இதே பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 28). இவர்கள் இருவரும் நண்பர்கள் ஆவார்கள். இந்நிலையில், இவர்கள் தங்களின் நண்பர்களுடன் மூணாறுக்கு சென்றுள்ளனர். 

பின்னர், அங்கிருந்து போடிக்கு திரும்பிக்கொண்டு இருந்த நிலையில், அங்குள்ள முந்தல் பகுதியில் வைக்கோல் ஏற்றிச்சென்ற மாட்டுவண்டியை கவனிக்காமல் சென்று, அதன் பின்னால் பயங்கரமாக மோதியுள்ளனர். 

Theni

இதனால் அவர்கள் இருவரும் வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்படவே, அவர்களுடன் வந்த நண்பர்கள் இருவரையும் மீட்டு போடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 

மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.