"அழக்கூட விடமாற்றங்க" - பெண்களுக்கு வில்லனாக மாறிய முத்துக்குமரன்.. களேபரமாகும் பிக் பாஸ் வீடு.!
டாஸ்மாக்கில் புகுந்து ரூ.1,50,000 கொள்ளையடித்த மர்ம நபர்கள்! போலீசார் வலைவீச்சு!!
அருப்புக்கோட்டை அருகே உள்ள ஊரில் மதுபான கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் ஒரு நாளைக்கு 1,70,000 ரூபாய் வரை வருமானம் வருகிறது. இந்த கடையில் சேல்ஸ்மேன், சூப்பர்வைசர், வாட்ச்மேன் என்று மூன்று பேர் வேலை பார்த்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சம்பவ தினத்தன்று வழக்கம்போல் மதுபானக் கடையை நடத்திவிட்டு, மூடும் சமயத்தில் இரண்டு இருசக்கர வாகனத்தில் முக கவசம் அணிந்து கொண்டு ஐந்து பேர் வந்தனர்.
அவர்கள் கையில் அரிவாளுடன் பணியாட்களை மிரட்டி கடையிலிருந்து 1,50,000 ஆயிரம் ரூபாய் கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர், இருசக்கர வாகன சோதனையில் ஈடுபடும்போது இரண்டு இளைஞர்கள் காவல்துறையினரை கண்டவுடன் தப்பியோட முயற்சித்து சிக்கிக் கொண்டுள்ளனர்.
அவர்களிடித்து விசாரித்ததில், இரண்டு பேரும் மதுபான கடையில் கொள்ளை அடித்தவர்கள் என்பது தெரிய வந்தது. மேலும் தலைமறைவான மூன்று பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.