குழந்தைகளை தவிக்க விட்டு கள்ளக்காதலனுடன் ஓடிய பெண்.... !! தங்களுடன் வருமாறு கதறி அழுத குழந்தைகள்...!!

குழந்தைகளை தவிக்க விட்டு கள்ளக்காதலனுடன் ஓடிய பெண்.... !! தங்களுடன் வருமாறு கதறி அழுத குழந்தைகள்...!!



The woman who ran away with her lover leaving her children to suffer..

சேலம், ஓமலூர் அருகே, கள்ளக்காதல் மோகத்தால் இரண்டு குழந்தைகளை தவிக்க விட்டுச் சென்ற பெண்ணை, ஓமலூர் காவல்துறையினர் புதுவையில் கண்டு பிடித்தனர். 

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள செம்மாண்டப்பட்டியை சேர்ந்தவர் சவுண்டப்பன். இவர், வீட்டில் பட்டு நெசவு தறி அமைத்து நெசவு தொழில் செய்து வருகிறார். இவருக்கும் திருப்பூரை சேர்ந்த லட்சுமி என்பவருக்கும் பத்து‌ வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில், இவர்களுக்கு 9 வயதில் ஆண் குழந்தையும் 7 வயதில் பெண் குழந்தையும் இருக்கின்றனர்.

இதேபோல் ஓமலூர் அருகேயுள்ள பொட்டியபுரத்தில் வசிப்பவர்  தனபால். இவருக்கு மனைவி ஒரு மகள் ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில், சவுண்டப்பன் வீட்டின் அருகே இருக்கும பட்டுத்தறி கூடத்தில், தனபால் பட்டு நெசவு செய்யும் கூலி வேலை செய்து வந்துள்ளார்.

அப்போது தனபாலும், சவுண்டப்பன் மனைவி லட்சுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் நெருங்கி பழக ஆரம்பித்தனர். இதைத் தொடர்ந்து இருவரும் ஏற்காடு, கொல்லிமலை, மேட்டூர் என பல இடங்களுக்குச் சென்று ஜாலியாக இருந்து வந்தனர். இதைத் தொடர்ந்து இருவரும் தங்கள் குடும்பத்தை பிரிந்து செல்ல திட்டமிட்டு இருவரும் தலைமறைவாகிவிட்டனர். 

இதையடுத்து லட்சுமியின் கணவர்  மனைவியை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதனடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பல இடங்களில் அவர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் பாண்டிச்சேரியில் அறை எடுத்து தங்கியிருந்த கள்ளக்காதல் ஜோடியை கண்டுபிடித்து, ஓமலூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது லட்சுமியை பார்த்து அவரது குழந்தைகளும், கணவரும் தங்களுடன் வருமாறு கதறி அழுதனர்.

ஆனால், தனக்கு குழந்தைகளும் வேண்டாம், கணவரும் வேண்டாம் என்று கூறிய லட்சுமி, கள்ளக்காதலன் தனபாலுடன் தான் செல்வேன் என்று கூறியுள்ளார். காவல்துறையினர் லட்சுமியை தனபாலுடன் அனுப்ப மறுத்து அவரது தாயுடன் அனுப்பி வைத்தனர். 

இதனிடையே தனபாலின் மனைவி, கணவனிடம் தகராறு செய்து தன்னுடன் வருமாறு சத்தமிட்டார். காவல்துறையினர் தனபாலை மனைவி மற்றும் குழந்தைகளுடன் அனுப்பி வைத்தனர். 

ஆனால், தனக்கு கணவன் குழந்தைகள் யாரும் வேண்டாம் என்று கூறிச் சென்ற லட்சுமியை பார்த்து அவரது குழந்தைகள் அழுதது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.