ஒன்பதாம் வகுப்பு மாணவியை கவுன்சிலருக்கு இரையாக்கிய பெண்.. கைது செய்த போலீசார்..!

ஒன்பதாம் வகுப்பு மாணவியை கவுன்சிலருக்கு இரையாக்கிய பெண்.. கைது செய்த போலீசார்..!



The school girl who came for help... the councilor who raped her...

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவியை தனியார் விடுதிக்கு அழைத்துச் சென்ற சிகாமணி, பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வைகை நகரை சேர்ந்தவர் சிகாமணி (43). இவர் அதிமுக பரமக்குடி நகர்மன்ற 3 வது வார்டு கவுன்சிலராக இருக்கிறார். மேலும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரின் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வேலை செய்து வருபவர் கயல்வழி.

கடந்த டிசம்பர் மாதம் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு அவரது பெற்றோர் பள்ளி கட்டணம் கட்டமுடியாமல் ஏழ்மையில் இருப்பதை அறிந்த கயல்விழி அவர்களிடம் சென்று பள்ளி கட்டணம் கட்ட தன்னுடைய முதலாளியிடம் சொல்லி சிறுமிக்கு உதவுவதாக கூறியுள்ளார்.

பின்னர் கயல்விழி‌ மாணவியை கவுன்சிலர் சிகாமணியிடம் அழைத்துச் சென்றுள்ளார்.  அப்போது மதுரை, ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பார்த்திபனூர் அருகே மருச்சுக்கட்டு என்ற இடத்தில் இருக்கும் தனியார் விடுதிக்கு மாணவியை அழைத்துச் சென்று பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் சிகாமணி.

அதன் பிறகு பிரபாகரன் என்பவரிடம் மாணவியை கயல்விழி அழைத்துச் சென்றுள்ளார். அவரும் மாணவியிடம் அத்துமீறியுள்ளார். இதைத் தொடர்ந்து பரமக்குடி மாதவன் நகரில் வசிக்கும் ராஜா முகமதுவும் மாணவியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். ராஜா முகமது பார்த்திபனூரில் ஜவுளிக்கடை வைத்துள்ளதுள்ளார். அத்துடன் ரியல் எஸ்டேட் பிஸ்னஸ்சும் செய்து வருகிறார். 

கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் தேதி முதல் சிகாமணி, பிரபாகரன், ராஜா முகமது என  மூன்று பேரும் சேர்ந்து அந்த மாணவியை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பணம் தொடர்பான பிரச்சினை வெளிவந்த போது கயல்விழி மற்றொரு நபரிடம் போனில் பேசிய ஆதாரம் வெளியானது. 

இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரையிடம் புகார் அளிக்கப்பட்டது. எஸ்.பி. உத்தரவின் பேரில் பரமக்குடி குற்றப்பிரிவு காவல்துறையினர், அதிமுக கவுன்சிலர் சிகாமணி, பிரபாகரன், ராஜா முகமது, கயல்விழி, அன்னலட்சுமி என்கிற உமா என ஐந்து பேரை கைது செய்துள்ளனர். 

பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் போக்சோ சட்டம், கூட்டு பாலியல் வன்கொடுமை போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஐந்து பேரையும் சிறையில் அடைத்தனர். 

கயல்விழி, அன்னலட்சுமி என்ற உமா இருவரும் பணக்கஷ்டத்தில் உள்ள பலரிடமும் பேசி அவர்களை பாலியல் தொழிலில் தள்ளும் தரகர்களாக செயல்பட்டு வந்ததுள்ளனர். மேலும் இளம் பெண்களிடம் பண ஆசையை தூண்டி, அவர்களை இதுபோல் பலரிடம் அனுப்பியுள்ளனர்.

காவல்துறையினர், இந்த சம்பவம் தொடர்பான ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்களை கைப்பற்ற  தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கைது எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று கூறப்படுகின்றது. இந்த சம்பவம் பரமக்குடியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது