பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி.. பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள்.. குவியும் பாராட்டுக்கள்..!

பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி.. பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள்.. குவியும் பாராட்டுக்கள்..!



The pregnant woman who was throbbing with labor pains.. the ambulance staff who saw the delivery.. heaped praises..!

கோவை மாவட்டம் ரத்தினபுரி பகுதியில் வசித்து வருபவர்கள் பழனி முருகன் -  மம்தா தம்பதியினர். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மம்தாவிற்கு திடீரென்று நேற்று பனிக்குடம் உடைந்து மிகுந்த வலி வேதனையுடன் கத்தி துடித்துள்ளார். இதனைக் கண்ட உறவினர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அதன் அடிப்படையில் அங்கு விரைந்து வந்த காந்திபுரம் 108 ஆம்புலன்ஸ் மம்தாவின் வீட்டிற்கு சென்றது. பின்னர் மம்தாவை ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆம்புலன்ஸில் ஏற்ற முயற்சி செய்துள்ளனர். அப்போது அவருக்கு வழி அதிகரித்ததோடு மட்டுமல்லாமல் குழந்தையின் தலையும் வெளியே வந்துள்ளது.

pregnant women

இதனையடுத்து ஆம்புலன்ஸ் மருத்துவ நிபுணர் கோபாலகிருஷ்ணன் மற்றும் பைலட் ஜெயக்குமார் ஆகியோர் உதவியுடன் மம்தாவிற்கு பிரசவம் பார்க்கப்பட்ட நிலையில் அழகிய ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இதனைத் தொடர்ந்து கோவை  அரசு மீனாட்சி தாய்சேய் நல மருத்துவமனையில் தாய் சேய் இருவரையும் பத்திரமாக கொண்டு சேர்த்தனர். பின்னர் அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் தாய் சேய் இருவரும் நலமுடன் இருப்பதாக கூறினர். மேலும் அவசரம் கருதி பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.