மின் மயானத்தில் போர்வெல் மோட்டார் ஓயர் திருடியவர் கைது.!

மின் மயானத்தில் போர்வெல் மோட்டார் ஓயர் திருடியவர் கைது.!



The person who stole Borwell motor oil from Min Mayan was arrested.

அவிநாசி பழைய பேருந்து நிலயத்தின் பின்புறம் பேரூராட்சி நிர்வாகத்தின் மின் மயானம் செயல்பட்டு வருகின்றது. இங்கு சம்பவம் நடந்த அன்று அதிகாலை மயானப் பொறுப்பாளர் பாலசுப்பிரமணியன், குடிநீர் பணியாளர் செல்வராஜ் ஆகியோர் மின் மயானத்திற்கு சென்றுள்ளனர். 

அப்போது ஒருவர் கையில் ஒரு சாக்கு மூட்டையுடன் மயானத்தில் இருந்து வெளியேறுவதை பாலசுப்பிரமணி பார்த்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் சாக்கு முட்டையுடன் சென்ற நபரை பிடித்து விசாரித்துள்ளார். அதனை தொடர்ந்து பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் கருப்பசாமிக்கு தகவல் அளிக்கப்பட்டது. 

Min mayan

இந்நிலையில் சுகாதார ஆய்வாளர் அந்த நபரிடம் விசாரித்ததில் அவர் காரமடை அருகே சிக்கரம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்று தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து நடத்திய விசாரணையில் ஆறுமுகம் மயானத்திலிருந்து போர்வெல் மின் மோட்டார் ஒயர்களை திருடியுள்ளார் என்று தெரியவந்துள்ளது.

இதனையடுத்து இந்த திருட்டு சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அவிநாசி போலீசார் ஆறுமுகத்தை கைது செய்தனர் மேலும் அவரிடம் இருந்த 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒயர்களை பறிமுதல் செய்தனர்.