காணாமல் போன பெண் அழுகிய நிலையில் சடலமாக மீட்பு... காவல்துறையினர் விசாரணை..!!

காணாமல் போன பெண் அழுகிய நிலையில் சடலமாக மீட்பு... காவல்துறையினர் விசாரணை..!!


The missing woman was found in a rotten state by the rescue police

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே காணாமல் போன பெண், அழுகிய நிலையில் தோட்டத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே இருக்கும் பல்லவராயன் பத்தை கிராமத்தில் வசிப்பவர்கள் திருச்செல்வம், பழனியம்மாள் தம்பதியர். கடந்த 23-ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற பழனியம்மாள் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் பல இடங்களில் தேடினர், அவர் கிடைக்காததால் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன பழனியம்மாளை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று பல்லவராயன் பத்தை அருகில் இருக்கும் தொம்பராம்பட்டி - பாதரைக்குளம் செல்லும் ரோட்டில் இருக்கும் தைலமர தோட்டத்தில் உடல் அழுகிய நிலையில் பழனியம்மாள் சடலமாக கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், கொலையாளிகளை கைது செய்யுமாறும், பழனியம்மாளின் குடும்பத்திற்கு அரசு இழப்பீடு வழங்கவும் கோரிக்கை விடுத்து அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.