நடிகர் தனுஷ் மீதான கிரிமினல் வழக்கு விசாரணையில் திருப்பம்!.. அதிரடி உத்தரவால் பரபரப்பு..!

நடிகர் தனுஷ் மீதான கிரிமினல் வழக்கு விசாரணையில் திருப்பம்!.. அதிரடி உத்தரவால் பரபரப்பு..!



The Madurai High Court judge has ordered the transfer of the case seeking criminal action against actor Dhanush to another session

நடிகர் தனுஷ் மீதான கிரிமினல் நடவடிக்கை கோரிய வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மதுரை, பிரபல நடிகரான தனுஷ் தங்களுக்கு பிறந்தவர் என மதுரை அருகேயுள்ள மேலூர் பகுதியை சேர்ந்த கதிரேசன்-மீனாட்சி தம்பதியினர் மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்திய இந்த வழக்கை கடந்த 2017 ஆம் ஆண்டு மதுரை உயர் நீதிமன்ற கிளை ரத்து செய்தது.

இதனையடுத்து, நடிகர் தனுஷ் தரப்பில் நீதிமன்றத்தி தாக்கல் செய்யப்பட்ட பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் போலியானவை. இதன் காரணமாக அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் கதிரேசன் தொடர்ந்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதனை தொடர்ந்து, மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, மதுரை உயர் நீதிமன்ற கிளையில் குற்றவியல் சீராய்வு மனுவை கதிரேசன் தாக்கல் செய்தார். சீராய்வு மனு மீதான விசாரணை, நீதிபதி இளங்கோவன் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது, கடந்த 2017 ல் தள்ளுபடி செய்யப்பட்ட வழக்கில் நடிகர் தனுஷ் மதுரை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அப்போது அவரது உடலில் மச்சங்கள், தழும்புகள் உள்ளிட்ட அங்க அடையாளங்களை  அரசு மருத்துவர்கள் சரி பார்த்து சான்று வழங்கினர்.

அந்த வழக்கு விசாரணையின் போது இதே நீதிமன்றத்தில் பதிவாளராக நான் பணியாற்றியுள்ளேன். எனவே இந்த சீராய்வு மனுவை நான் விசாரிப்பது சரியாக இருக்காது. இதன் காரணமாக வேறு அமர்வுக்கு இந்த வழக்கை மாற்ற பரிந்துரைக்கிறேன் என்று நீதிபதி இளங்கோவன் உத்தரவிட்டார்.