காரை ஓரமாக நிறுத்திவிட்டு காதலியுடன் பேசிக்கொண்டிருந்த இளைஞன்! திடீரென நண்பர்களுடன் வந்த பெண்ணின் சகோதரன் செய்த செயல்!

காரை ஓரமாக நிறுத்திவிட்டு காதலியுடன் பேசிக்கொண்டிருந்த இளைஞன்! திடீரென நண்பர்களுடன் வந்த பெண்ணின் சகோதரன் செய்த செயல்!


The gang and brother that hacked the young man and picked up the sister

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஐஸ்வர்யா நகர் பகுதியில் இளைஞர் ஒருவர் சொகுசு காரில் இளம் பெண்ணுடன் வந்து காரை ஒரமாக நிறுத்திவிட்டு, தனது காதலியுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென மூன்றுபேர் இருச்சக்கர வாகனத்தில் வந்து அந்த இளைஞனை அரிவாளால் வெட்டிவிட்டு அப்பெண்ணை இழுத்துச்சென்றனர். 

இதனையடுத்து அங்கிருந்தவர்கள் காயமடைந்த இளைஞனை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.இதுகுறித்து தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 

young man

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், வெட்டுபட்ட இளைஞர் பெயர் இர்பான் என்பதும், இவர் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்த நிலையில், அந்த பெண்ணின் சகோதரர் உட்பட மூன்றுபேர் இர்பானை வெட்டிவிட்டு அந்த பெண்ணை இழுத்துச்சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.