மது போதையில் ஆம்புலன்ஸை வரவழைத்த கணவன்.. போலீசில் பிடித்து கொடுத்து விடுவேன் என்று கணவனை அலறவிட்ட மனைவி..!

மது போதையில் ஆம்புலன்ஸை வரவழைத்த கணவன்.. போலீசில் பிடித்து கொடுத்து விடுவேன் என்று கணவனை அலறவிட்ட மனைவி..!


The drunken husband called the ambulance.. The wife screamed at her husband that she would hand him over to the police..!

குடிபோதையில் விபத்தில் சிக்கிக் கொண்டதாக 108 ஆம்புலன்ஸை வரவழைத்த கணவனை போலீஸில் பிடித்துக் கொடுத்து விடுவதாக மனைவி கூறி கணவனை அலறவிட்ட சுவாரஸ்ய சம்பவம் நாமக்கல்லில் அரங்கேறி உள்ளது.

நாமக்கல் மாவட்டம் சிட்கோ காலனியை சேர்ந்த முருகேசன் என்பவர் தான் சாலை விபத்தில் அடிபட்டு விட்டதாக குடிபோதையில் ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஆம்புலன்சில் வந்த மருத்துவ குழுவினர் முருகேசனை சோதித்துள்ளனர். அப்போதுதான் அவர்களுக்கு தெரிந்தது அவர் மது போதையில் தவறான தகவலை கூறி தங்களை அங்கு வரவழைத்திருப்பது. 

Drunken husband

இந்நிலையில் தனது கணவன் மது போதையில் ஆம்புலன்ஸை வரவழைக்கப்பட்ட சம்பவம் அறிந்த முருகேசனின் மனைவி அங்கு சென்று ஆம்புலன்ஸ் பணியாளர்களிடம் மன்னிப்பு கேட்டதோடு  முருகேசனையும் அங்கிருந்து புறப்படுமாறு கூறியுள்ளார். ஆனால் முருகேசன் அங்கிருந்து செல்லாமல் தொடர்ந்து ஆம்புலன்ஸ் பணியாளர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது மனைவி போலீசில் பிடித்துக் கொடுத்து விடுவேன் என்று கூறியதும் துண்டை காணோம் துணியை காணோம் என்று முருகேசன் அலறடித்து கொண்டு ஓட்டம் எடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.