தெரு நாய்களின் அட்டூழியம்... சிறுவனை கடித்துக் குதறி உயிரைப் பறித்த சம்பவம்... கதறும் குடும்பத்தினர்...!

தெரு நாய்களின் அட்டூழியம்... சிறுவனை கடித்துக் குதறி உயிரைப் பறித்த சம்பவம்... கதறும் குடும்பத்தினர்...!


the-cruelty-of-stray-dogs-the-incident-that-bit-a-boy-a

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெரிய கோவிலான்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாதுரை. மாற்றுத்திறனாளியான அவர் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவரது மூத்த மகன் அஜித் சங்கரன்கோவிலிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் +2 படித்து வருகிறார். இவரது மற்றொரு மகனான சுஜித் உள்ளூரிலேயே 10ம் வகுப்பு படித்து வருகிறார்.

இதனைத்தொடர்ந்து மூத்த மகன் அஜித் தினமும் பள்ளிக்கு அரசு பேருந்தில் சென்று வருவது வழக்கம்.இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளி முடிந்து வீடு திரும்பும் வழியில் நாய் கடித்து குதறிவுள்ளது. ஆனால் நாய் கடித்த சம்பவத்தை சிறுவன் அஜித் பெற்றோரிடம் சொல்லாமல் மறைத்து விட்டார்.

Rabid bite

இந்நிலையில்தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு அஜித்துக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பெற்றோர் உள்ளூரிலே வைத்தியம் பார்த்து வந்துள்ளனர். இருப்பினும் உடல் நிலையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாத நிலையில் சங்கரன்கோவிலில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இருக்கின்றனர் பெற்றோர்.

அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அஜித்திடம் விசாரித்த போது சில தினங்களுக்கு முன்பு தன்னை நாய் கடித்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனே சிறுவனை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அஜித் உயிரிழந்தார்.

மேலும் நாய் கடித்து மாணவன் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.