சொந்த மகளையே வன்கொடுமை செய்த கொடூரம்; தந்தை மீது குண்டர் சட்டம் பாய்ந்தது...!The brutality of brutalizing his own daughter; Gangster law fell on the father.

சிறுமியை வன்கொடுமை செய்த தந்தை மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. 

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 18 வயது சிறுமி ஒருவரை அவரது தந்தை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் அந்த சிறுமி கர்ப்பமடைந்தார். இந்நிலையில் அந்த சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் ஆலங்குடி அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தந்தையை கைது செய்தனர்.

பின்னர் பாலியல் வன்கொடுமை செய்த சிறுமியின் தந்தையை புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கைதான அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி, மாவட்ட ஆட்சியர் கவிதாராமுவுக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே பரிந்துரை செய்தார். 

இது தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க, அதற்கான நகலில் காவல் துறையினர் கையெழுத்து பெற்றனர். மேலும் அவரை குண்டர் சட்டத்தில் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.