ஆசையுடன் விளையாடச்சென்ற சிறுவர்கள்.! தூக்கு கயிறாக மாறிய ஊஞ்சல் கயிறு.! கதறி துடிக்கும் பெற்றோர்.!

ஆசையுடன் விளையாடச்சென்ற சிறுவர்கள்.! தூக்கு கயிறாக மாறிய ஊஞ்சல் கயிறு.! கதறி துடிக்கும் பெற்றோர்.!


The boy was strangled to death by a rope around his neck

பீகார் மாநிலத்தை சேர்ந்த ஜனதாகுமார்-நிக்கி தேவி என்ற தம்பதி கடந்த 5 வருடங்களாக ஈரோட்டில் உள்ள ஈங்கூர் சிப்காட் பகுதியில் தங்கி ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகனும், 10 வயதில் ஒரு மகனும் உள்ளனர். ஜனதாகுமாரின் மகன்கள் இருவரும் ஈங்கூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறார்கள்.

இந்நிலையில் ஜனதாகுமார்-நிக்கி தேவி தம்பதி நேற்று வேலைக்குச் சென்ற நிலையில், அவர்களின் மகன்கள் இருவரும் நேற்று மாலை வீட்டின் அருகே உள்ள உள்ள மரத்தில் கயிற்றில்  ஊஞ்சல் கட்டி விளையாடி கொண்டிருந்தனர். அப்போது ஜனதாகுமாரின் இளைய மகன் ராஜா குமார் தனது கழுத்தில் கயிற்றைப் போட்டுக் குதித்த போது எதிர்பாராதவிதமாக பிளாஸ்டிக் கயிறு கழுத்தை இறுக்கியதால் மயங்கி கீழே விழுந்துள்ளான். 

இதனைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக ராஜாகுமாரை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் ராஜாகுமார் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனது மகன் மறைவு செய்தியறிந்த பெற்றோர் கதறி துடித்துள்ளனர்.