காதலியை ஏமாற்றி கருக்கலைப்பு செய்ய வைத்த காதலன்.. நம்பி மோசம் போன காதலி.. அதிர்ச்சி சம்பவம்...!

காதலியை ஏமாற்றி கருக்கலைப்பு செய்ய வைத்த காதலன்.. நம்பி மோசம் போன காதலி.. அதிர்ச்சி சம்பவம்...!


the-boy-friend-cheated-his-girl-friend-and-forced-her-t

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே  இருக்கும் தாண்டவராயபுரம் காமராஜ் நகரில் குடியிருப்பவர் கிருஷ்ணன் (22).  திருமணங்களுக்கு பந்தல் போடும் வேலை செய்து வருகிறார். இவருக்கும் அந்த பகுதியில் வசிக்கும் 19 வயது இளம் பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இதனால் அந்தப்பெண் கர்ப்பமடைந்தார். தான் கர்ப்பமான விவரத்தை கிருஷ்ணனிடம் தெரிவித்தார்.

மேலும் தன்னை திருமணம் செய்துக்கொள்ள காதலன் கிருஷ்ணனை அந்தப்பெண் வற்புறுத்தினர். இதனால் கிருஷ்ணன் அவரை திருமணம் செய்துக்கொண்டார், திருமணத்துக்கு பிறகு அந்தப்பெண்ணை வற்புறுத்தி கருவை கலைக்க வைத்து, சிகிச்சை முடிந்து வந்த பிறகு அந்தப்பெண்ணை அவரது தாய் வீட்டிற்கு அனுப்பியுள்ளார். .

அந்த பெண் தாய் வீட்டிற்கு சென்ற பிறகு கிருஷ்ணன் அந்த பெண்ணுடன் பேசுவதை நிறுத்திக்கொண்டார். அந்த பெண் தன்னுடன் குடும்பம் நடந்த அழைத்தபோது கிருஷ்ணன் மறுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் ஆத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலைத்தில் புகார் அளித்தார்.

அந்தப் புகாரில், காதலித்து கர்ப்பமாக்கி தன்னை ஏமாற்றி கருக்கலைப்பு செய்ததாக கூறப்பட்டுள்ளது. இந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர், கிருஷ்ணனை கைது செய்து அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.