அரசியல் தமிழகம் General

கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி

Summary:

திமுகவின் முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி கடந்த 6-ம் தேதி காவேரி மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவுக்கு பின்னர், கட்சியின் தலைவராக மு.க ஸ்டாலின் நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்நிலையில், கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்கு பின்னர் அவர் வீடு திரும்புவார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய படம்

திமுக முன்னாள் தலைவர் கருணாநிதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட போதே, தயாளு அம்மாள் உடல் நலிவுற்றிருந்தார். மேலும், காவிரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக கருணாநிதி அனுமதிக்கப்பட்டிருந்த போது, ஒரே ஒரு முறை மட்டுமே வந்து தயாளு அம்மாள் அவரை உடல் நலனை கேட்டறிந்தார். 


Advertisement