அரசியல் தமிழகம்

தேர்தலில் டெபாசிட் இழந்த வேட்பாளர்! வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த வினோத செயல்!

Summary:

thanks giving to voter

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்‌பட்ட 9 மாவட்டங்கள் மற்றும் சென்னை தவிர்த்து, 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டங்களாக நடத்தப்பட்டது. முதல்கட்ட தேர்தலில் 76 சதவீத வாக்குகளும், இரண்டாம் கட்ட தேர்தலில் 77.73 சதவீத வாக்குகளும் பதிவானது. 

இந்நிலையில், நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில், இரு தினங்களாக வாக்கு எண்ணிக்கை நடைக்கேற்றது. இன்னும் ஒரு சில இடங்களில் சில காரணங்களால் முடிவு வெளியிடப்படாமலும் உள்ளது.

இந்தநிலையில், மதுரை சேட்டம்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோதுவார்பட்டி ஊராட்சியில் 2 வார்டு உறுப்பினர் பதவிக்கு கட்டில் சின்னத்தில் முருகேசன் என்பவர் போட்டியிட்டார். ஆனால் அவர் அந்த தேர்தலில் டெபாசிட் இழந்தார்.

இதனையடுத்து தனக்கு வாக்களிக்காமல் தோற்கடித்த வாக்காளர்க்கு நன்றி தெரிவித்து, நீங்கள் இப்படி செய்வீர்கள் என நினைக்கவில்லை எனவும் அந்த போஸ்டரில் எழுதியுள்ளார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.


Advertisement