கணவன், ஆளான பிள்ளைகளை உதறி 25 வயது கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த 39 வயது பெண் : கர்ப்பமாக இருப்பதாக கணவனுக்கு மெசேஜ்.!Thanjavur Orathanadu Woman Escape with Affair Boy

கணவன் வெளிநாட்டில் குடும்பத்திற்காக உழைக்க, மனைவி 25 வயது வாலிபருடன் திருமணம் செய்து தான் கர்ப்பமாக இருப்பதாக வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பிய பகீர் சம்பவம் நடந்துள்ளது. குடும்பத்திற்காக உழைத்து ஓடாய்போன மனிதனுக்கு துரோகம் இழைத்த மனைவியின் பகீர் செயல் குறித்து விவரிகரித்து இந்த செய்தித்தொகுப்பு.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாட்டில் வசித்து வருபவர் ஐயப்பன். இவர் சிங்கப்பூரில் வேலைபார்த்து வருகிறார். ஐயப்பனின் மனைவி லலிதா (வயது 39). தம்பதிகளுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். மூத்த மகன் எஞ்சினியரிங் படித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலைபார்க்கிறார். 2-ம் மகன் கல்லூரியில் பி.பி.ஏ இரண்டாம் ஆண்டு படிக்கிறார். கடந்த 13-ம் தேதியில் லலிதா தனது வீட்டில் 20 சவரன் நகைகளை எடுத்துக்கொண்டு மாயமானார். 

thanjavur

வெளிநாட்டில் இருக்கும் தனது கணவருக்கு வாட்ஸப்பில் அவர் அளித்த தகவலில், "எனக்கு கடலூரை சேர்ந்த 25 வயது இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது. அவரை நான் திருமணம் செய்துகொண்டேன். தற்போது நான் 4 மாத கர்ப்பமாக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இந்த தகவலை மகன்களுக்கு தெரியப்படுத்திய தந்தை, காவல் நிலையத்தில் புகார் அளிக்க அறிவுறுத்தியுள்ளார். இந்த விசயம் குறித்து ஐயப்பனின் மகன் ஒரத்தநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் விசாரணை நடந்து வருகிறது.