தமிழகம்

பயங்கரவாதிகளுடன் தொடர்பா?.. தஞ்சாவூரில் என்.ஐ.ஏ அதிரடி சோதனையால் பரபரப்பு..!

Summary:

பயங்கரவாதிகளுடன் தொடர்பா?.. தஞ்சாவூரில் என்.ஐ.ஏ அதிரடி சோதனையால் பரபரப்பு..!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கீழவாசல், மகர்நோன்பு சாவடி பகுதியில் உள்ள 2 வீடுகளில், இன்று அதிகாலை 5 மணியளவில் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். 

மகர்நோன்பு சாவடியை சேர்ந்த முகமது யாசின், அப்துல் காதர் ஆகியோரின் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட நிலையில், இவர்கள் இருவரும் சமூக வலைத்தளத்தில் பயங்கரவாத இயக்கத்திற்கு ஆதரவான கருத்துக்களை பதிவு செய்ததாக கூறப்படுகிறது. 

மேலும், இவர்களுக்கு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாகவும் சந்தேகிக்கப்படும் நிலையில், விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. புழல் சிறையில் உள்ள மண்ணை பாபாவிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் சோதனை நடந்து வருகிறது. 

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், கூடுதல் காவல் துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.


Advertisement