தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
தென்னை மரத்தில் ஏறி நிலைதடுமாறியதால் சோகம்: மின்கம்பி மீது விழுந்த கூலித்தொழிலாளி பரிதாப பலி.. துக்கவீட்டில் பரிதாபம்.!
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம், வலங்கைமான் பகுதியை சேர்ந்தவர் பன்னீர். இவரின் தயார் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்து இருக்கிறார்.
இவரின் உறவினரான சோழநல்லூரை சேர்ந்த தனசேகரன் (வயது 43), துக்க நிகழ்வுக்காக பன்னீரின் வீட்டிற்கு வந்துள்ளார்.
அங்கு தென்னைமட்டை பறிக்க, தென்னைமரம் மீது ஏறியதாக தெரியவருகிறது. அச்சமயம் தென்னை குருத்து உடைந்துவிடவே, நிலைதடுமாறிய தனசேகரன் உயர்மின் அழுத்த கம்பி மீது விழுந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் தனசேகரன் மின்சாரம் தாக்கி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரை மீட்ட உறவினர்கள், மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றபோது உயிரிழப்பு உறுதி செய்யப்பட்டது.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த வலங்கைமான் காவல் துறையினர், தனசேகரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.