சிறுமிகளை ஆபாச படமெடுத்து சர்வதேச கும்பலுக்கு அனுப்பி வைத்த இளைஞர்.. பிரதமருக்கு வந்த மெயிலால் சிக்கிய சம்பவம்..!!

சிறுமிகளை ஆபாச படமெடுத்து சர்வதேச கும்பலுக்கு அனுப்பி வைத்த இளைஞர்.. பிரதமருக்கு வந்த மெயிலால் சிக்கிய சம்பவம்..!!thanjavur-boy-arrested-by-cbcid-police

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சாலியமங்கலம் அருகே பூண்டிதோப்பு பகுதியைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் தஞ்சாவூர் தனியார் கல்லூரியில் சுற்றுச்சூழல் துறையில் படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 15-ஆம் தேதி டெல்லியில் இருந்து வந்த சிபிஐ அதிகாரிகள் 11 பேர் கொண்ட குழுவினர் பட்டதாரி இளைஞரின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர்.

கடந்த மூன்று நாட்களாக இவரிடம் தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்ட நிலையில், முதற்கட்டமாக பிரதமரின் அலுவலகத்திற்கு அவதூறான மெயில் அனுப்பியதால் விசாரணை நடத்தப்பட்டு வருகிறதாக கூறப்பட்டது. 

இந்த நிலையில் இவர் சிறுமிகளை வைத்து ஆபாச படம் எடுத்து இணையத்தில் பதிவேற்றம் செய்ததாகவும், சர்வதேச கும்பலோடு அதனை பகிர்ந்ததாகவும் பரபரப்பு தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதனால் அவர்மீது போக்சோ சட்டம், கூட்டு சதி, தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உட்பட பல பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்துள்ள சிபிஐ அதிகாரிகள் கைது செய்து தொடர்பு விசாரணை நடத்துகின்றனர். 

thanjavur

இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் கூறுகையில், பிரதமரின் அலுவலகத்திற்கு அவதூறு மெயில் அனுப்பிய விவகாரத்தில் ரகசிய விசாரணை சிபிஐ அதிகாரிகளால் நடத்தப்பட்டது. 

இதில் பட்டதாரியான அந்த இளைஞர் பல நாடுகளில் இருக்கும் நண்பர்களுக்கு சிறுமிகளின் ஆபாச படத்தை அனுப்புவது, பதிவிறக்கம் செய்வது போன்ற குற்றங்களில் ஈடுபட்டுள்ளார். இன்டர்போல் காவல்துறையினர் மத்திய அரசிடம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினர். 

அதன் பெயரில் சிபிஐயிடம் வழக்கு விசாரணை ஒப்படைக்கப்பட்டு, இந்தியாவில் உள்ள 21 மாநிலங்களில் சிறுமிகளின் ஆபாச படத்தை பதிவிறக்கம் செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டது வரை அதிகாரிகள் கண்டறிந்து கைது செய்துள்ளனர் என்று தெரிவித்தனர்.