கள்ளக்குறிச்சியில் 12ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை.! அதிர்ச்சி காரணம்.!

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள கோவிந்தசாமிபுரத்தை சேர்ந்த சிறுமி அங்குள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். அந்த சிறுமியின் வீட்டிற்கு அருகே அலமேலு என்பவர் வசித்து வருகிறார். அவரது வீட்டிற்கு உறவினரான விஜய் என்பவர் அடிக்கடி வந்து சென்றுள்ளார்.
அப்போது அவருக்கும் மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து விஜய்யின் அத்தை அலமேலுவுக்கு தெரிய வந்த நிலையில், தனது கணவர் மற்றும் மகனுடன் மாணவியின் வீட்டிற்கு சென்று மாணவியின் குடும்பத்துடன் தகராறு செய்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த மாணவி சேலையால் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.