AVM சரவணன் காலமானார்! முதல் ஆளாக கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்! பெரும் சோகம்..!!
ஓடும் ரயிலில் இளம் பெண்ணுக்கு பாலியல் சீண்டல்... தொழில் அதிபர் கைது.!!
பெங்களூரு தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இளம் பெண் கடந்த செவ்வாய் கிழமை இரவு தனது சொந்த ஊரான ஈரோடு செல்வதற்காக குரலா விரைவு ரயிலில் பயணம் செய்தார். இந்த ரயில் சரியாக புதன்கிழமை அதிகாலை தர்மபுரியை கடந்து வந்த போது அந்த பெண்ணிற்கு அருகிலிருந்த ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த சங்கர் என்ற நபர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
ஜவுளி தொழில் வியாபாரம் செய்து வரும் சங்கர் வியாபாரம் தொடர்பாக ஈரோட்டுக்கு ரயிலில் வந்த போது தனியாக இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் கூச்சலிட்டு அருகில் உள்ளவரை அழைத்துள்ளார்.

பின்னர் அங்கு வந்த பயணிகள் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட அவரை மடக்கி பிடித்தனர். இது குறித்து சேலம் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தொடர்ந்து புதன்கிழமை அதிகாலை 4:00 மணி அளவில் ரயில் சேலம் ரயில் நிலையத்திற்கு வந்தபோது அந்த இளம் பெண் ரயில்வே போலீசாரிடம் பாலியல் தொல்லையளித்த நபரை ஒப்படைத்துள்ளார். பின்னர் இது குறித்து காவல் துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
இதையும் படிங்க: அட பாவமே... பெத்த மகளுக்கே பாலியல் தொல்லை.!! தந்தை மீது பாய்ந்த போக்சோ சட்டம்.!!