செல்ஃபி எடுக்க முயன்ற 2 பேர் பலி... காவல்துறை தீவிர விசாரணை.!terror-in-tirupurtwo-people-died-while-trying-to-take-a

திருப்பூரில் ரயில்வே  தண்டவாளம் அருகே நின்று செல்பி எடுக்க முயன்ற இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் அனைப்பாளையம் ரயில்வே தண்டவாளத்தில் நின்று இரண்டு பேர் செல்பி எடுக்க முயன்றுள்ளனர். அப்போது அந்த தண்டவாளத்தை கடந்து சென்ற ரயில் மோதியதில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து இவர்களது சடலத்தை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

tamilnadu

மேலும் காவல்துறையின் விசாரணையில் இறந்தவர்கள் பாண்டி மற்றும் பிச்சை என்று தெரிய வந்திருக்கிறது. மேலும் இந்த விபத்து தொடர்பாக காவல்துறை தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகிறது.

tamilnadu

ரயில்வே தண்டவாளம் போன்ற ஆபத்தான பகுதிகளில் நின்று செல்பி எடுக்க வேண்டாம் என எவ்வளவு எச்சரித்தாலும் இளைஞர்களுக்கு அது புரியாமலே இருக்கிறது. இது போன்ற விபரீதமான செயல்களால் பல விபத்துக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.