கள்ளகாதலியுடன் வீட்டிற்கு வந்த கணவனை நொறுக்கியெடுத்து கொலை செய்த மனைவி.. தென்காசியில் பகீர் சம்பவம்.!Tenkasi Shengottai Wife Kills Husband He Arrive Home with Affair Woman

அன்பார்ந்த மனைவி உயிருடன் இருக்க, கள்ளக்காதல் வயப்பட்ட கணவனை மனைவி கட்டையால் அடித்து கொலை செய்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. 

தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை, திருமலாபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் முருகன் (வயது 40), நாச்சியார் (வயது 35). இவர்கள் இருவருக்கும் 2 பெண் குழந்தைகள் மற்றும் 1 ஆண் குழந்தை பிள்ளைகளாக உள்ளனர். நேற்று முருகன் அவரின் வீட்டிற்கு மற்றொரு பெண்ணை அழைத்து வந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த முருகனின் மனைவி, கணவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார். முருகனிடம் வாக்குவாதம் செய்ததற்கு, அவர் அழைத்து வந்த பெண்மணி எதிர்ப்பு தெரிவித்து பதில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதம், கைகலப்பில் நிறைவடைந்துள்ளது. 

வீதியில் இருவரையும் சண்டையிட்டதை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அவர்களை சமாதானம் செய்து பெண்ணை அனுப்பி வைத்துள்ளனர். நேற்று இரவு மதுபானம் அருந்திவிட்டு வந்த முருகன், தனது மனைவி நாச்சியாரிடம் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற நாச்சியார், வீட்டில் இருந்த மிளகாய் பொடியை எடுத்து கணவரின் கண்களில் தூவியுள்ளார். 

Tenkasi

பின்னர், அங்கிருந்த உருட்டுக்கட்டையை அடுத்து முருகனை சரமாரியாக தாக்கவே, தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இரத்த வெள்ளத்தில் மிதந்து உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக அக்கம் பக்கத்தினர் செங்கோட்டை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நாச்சியாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பேரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.