த்ரிஷா புடவையில் விஜயின் கட்சி கொடி.. பிரபல தயாரிப்பாளர் சரமாரி கேள்வி?
பாட்டி, பேரன், 2 கோழிகள் கொடூர கொலை... தாயை பார்க்க சென்ற மகனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.. பயங்கர சம்பவம்.!
செங்கோட்டை அருகே பேரன், பாட்டி மற்றும் கூண்டில் இருந்த 2 கோழிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை, அச்சன்புதூர் மேக்கரை கிராமத்தில் வசித்து வருபவர் அப்துல் கனி. இவரின் மனைவி ஜைத்தூன் பீவி (வயது 70). தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். மூத்த மகன் முகம்மது கனி. கடைசி மகன் காசிர் அலி (வயது 26). 2 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. அதனைத்தொடர்ந்து, குடும்பத்துடன் மேக்கரை அணைக்கட்டு சாலையில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினத்தில் கணவரிடம் கோபித்துக்கொண்டு காசிர் அலியின் மனைவி அசன் பீவி, தென்காசியில் இருக்கும் பெற்றோரின் வீட்டிற்கு சென்றுள்ளார். முகம்மது கனி மனைவியுடன் மேக்கரை தோப்பு பகுதியில் இருக்கிறார். நேற்று தாய் மற்றும் மகனை காண முகம்மது கனி வீட்டிற்கு செல்லவே, வீட்டினுள் மகன் இரத்த வெள்ளத்தில் பிணமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
மேலும், மாட்டு கொட்டகையில் தாய் நிர்வாணமாக கொலை செய்யப்பட்டு பிணமாக கிடக்கவே, கோழிக்கூண்டில் இருந்த 2 கோழிகளும் துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளது. இதனைத்தொடர்ந்து, அச்சன்புதூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், பாட்டி மற்றும் பேரனின் உடலை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.