ஜாதி மறுப்பு திருமணம் செய்த மனைவியின் தாலியை அறுத்து அனுப்பிய காதல் கணவன்.. 18 ஆண்டு வாழ்ந்து பழிதீர்ப்பு??..! 

ஜாதி மறுப்பு திருமணம் செய்த மனைவியின் தாலியை அறுத்து அனுப்பிய காதல் கணவன்.. 18 ஆண்டு வாழ்ந்து பழிதீர்ப்பு??..! 



tenkasi-sankarankoil-inter-caste-marriage-girl-tortured

சாதி மறுப்பு திருமணம் செய்த பெண்மணி 18 வருடம் கழித்து கணவரால் கைவிடப்பட்டார். இறுதியில், ஜாதியை அறுத்து திருமணம் செய்த பெண்மணி தாலி அறுத்து அனுப்பப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.. 

தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கர்கோவில், பன்னீர்ஊத்து கிராமத்தை சேர்ந்தவர் ஆசிரியர் பச்சைமான். இவர் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் 18 வருடங்களுக்கு முன் வேலைபார்த்த சமயத்தில், புதுக்கோட்டையை சேர்ந்த புவனேஸ்வரி என்ற பெண்மணியை 2007-ம் ஆண்டு காதலித்து பெண்தரப்பு பெற்றாரை எதிர்த்து ஜாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டார்.

தம்பதிகளுக்கு ஸ்ரீராம் பிரசாத், ஸ்ரீ சூர்யா பிரகாஷ் என்ற இரண்டு மகன்கள் உள்ள நிலையில், ஜாதிமறுப்பு திருமணம் செய்த காரணத்தால் பச்சைமானுக்கு அரசு ஆசிரியர் வேலை கிடைத்துள்ளது. 18 ஆண்டுகளாக காதல் மனைவியுடன் வாழ்ந்து வந்த பச்சைமால், திடீரென காதல் மனைவியை விவாகரத்து செய்ய திட்டமிட்டுள்ளார்.

Tenkasi

இதனையடுத்து, பச்சைமான் தனது குடும்பத்தாருடன் சேர்ந்து காதல் மனைவியை அடித்து வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளனர். இதனால் கையில் குழந்தையுடன் காவல் நிலையத்திற்கு நடையாய் நடந்து நீதிகேட்டு புவனேஸ்வரி போராட, இறுதியில் டி.எஸ்.பி முன்னிலையில் ஆசிரியரை நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. 

இந்த பேச்சுவார்த்தையின் போது பச்சைமான் நான் நீதிமன்றத்தில் எதுவாக இருந்தாலும் சந்தித்துக்கொள்கிறேன் என்று கூறிவிட, புவனேஸ்வ்ரி தனது குழந்தைகளை மட்டுமாவது பார்த்துக்கொள்ளுங்கள். நான் கூலி வேலை செய்து பிழைத்துக்கொள்கிறேன் என்று கெஞ்ச, அவரின் குழந்தைகள் மட்டும் தந்தை வசம் ஒப்படைக்கப்பட்டது. 

ஜாதியை மறுத்து திருமணம் செய்த பெண்மணியின் தாலியை கூட அவரின் காதல் கணவன் தரப்பு வாங்கி வைத்துக்கொண்டு அனுப்பி வைத்து, விவாகரத்து வழக்குக்கு நீதிமன்றத்திற்கு சரியாக வந்துவிடு என கூறி அனுப்பி வைத்துள்ளது தான் கொடுமையின் உச்சம்.