பெண்ணுக்கே தெரியாமல் ஒருதலைக்காதல்: குடிப்பழக்கத்தால் அப்பாவி தந்தை கொடூர கொலை.! 

பெண்ணுக்கே தெரியாமல் ஒருதலைக்காதல்: குடிப்பழக்கத்தால் அப்பாவி தந்தை கொடூர கொலை.! 


Tenkasi Puliyangudi Man Killed by Youngster 

 

தென்காசி மாவட்டத்தில் உள்ள புளியங்குடி, சுள்ளக்கரை தெருவில் வசித்து வருபவர் அய்யாக்குட்டி (வயது 55). அப்பகுதியில் செயல்பட்டு வரும் ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரின் மனைவி கனகலட்சுமி. தம்பதிகளுக்கு ஆவுடைச்செல்வி என்ற மகள் இருக்கிறார். 

அய்யாக்குட்டியுடைய மகளுக்கு இன்று திருமணம் நடைபெறவிருந்தையொட்டி, உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கும் பணியில் ஈடுபட்டுவிட்டு, கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தார். 

நள்ளிரவு நேரத்தில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர், அய்யாக்குட்டியை கத்தரிக்கோலால் குத்திக் கொடூரமாக கொலை செய்து தப்பிச்சென்றார். இந்த விஷயம் தொடர்பாக புளியங்குடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 
 
விசாரணையில், புளியங்குடி டி.என் புதுக்குடியை சேர்ந்த முருகனின் மகன் செல்வமுருகன் (வயது 25) கொலை செயலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. அவரை கைது செய்த அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் அம்பலமானது. 

டிப்ளமோ பயின்றுள்ள செல்வமுருகன், தனது தந்தையுடன் டைல்ஸ் ஓட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். மதுபோதைக்கும் அடிமையாக இருந்துள்ளார். சமீபமாக செல்வமுருகன் ஆவுடைச்செல்வியை ஒருதலையாக காதலித்து வந்ததாக தெரியவருகிறது. 

இது ஆவுடைச்செல்விக்கே தெரியாது. சம்பவத்தன்று, தனது ஒருதலைப்பட்ச  காதலிக்கு திருமணம் நடக்கும் செய்தியை அறிந்துகொண்ட செல்வமுருகன், அதிகளவு மதுபானம் அருந்திவிட்டு நள்ளிரவில் அய்யாக்குட்டியை கொலை செய்திருக்கிறார் என்பது அம்பலமானது. 

இதனையடுத்து, செல்வமுருகனை கைது செய்த காவல் துறையினர், நீதிமன்றத்தில் சமர்ப்பித்து சிறையில் அடைத்தனர்.