சண்டையை தடுக்க முயற்சித்த நண்பன் கொலை.. ஆத்திரத்தீயால் துடிதுடித்து போன உயிர்.!

சண்டையை தடுக்க முயற்சித்த நண்பன் கொலை.. ஆத்திரத்தீயால் துடிதுடித்து போன உயிர்.!


Tenkasi Puliyangudi Friend Killed Another One During Argument

டீக்கடையில் ஏற்பட்ட தகராறில், நண்பரை மற்றொரு நண்பர் கண்டிக்க, ஆத்திரத்தில் செய்த செயல் நபரின் உயிரை பறித்துள்ள சோகம் நடந்துள்ளது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள புளியங்குடி, கிணற்றுத்தெரு பகுதியை சார்ந்தவர் முருகேசன் (வயது 58). இவர் தச்சு வேலை பார்த்து வந்துள்ளார். காந்திபஜார் முடுக்கு தெரு பகுதியை சார்ந்தவர் சுந்தரம் (வயது 2). இவர்கள் இரண்டு பேரும் நண்பர்கள் ஆவார்கள். 

நேற்று இரவு நேரத்தில் இருவரும் சேர்ந்து, டி.என் புதுக்குடி பகுதியில் உள்ள பூ மார்க்கெட் அருகேயுள்ள டீ கடையில் நின்று பேசிக்கொண்டு இருந்துள்ளனர். இதன்போது, அந்த ஊரை சார்ந்த ராசுக்குட்டி என்பவர் கடைக்கு வரவே, சுந்தரத்திற்கும் - அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

Tenkasi

இதன்போது, சுந்தரம் ராசுக்குட்டியை தக்க முயற்சிக்கவே, அருகில் இருந்த முருகேசன் சுந்தரத்தை தடுத்து நிறுத்தியுள்ளார். மேலும், அவரை திட்டி இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த சுந்தரம், முருகேசனை கன்னத்தில் அறைந்து தள்ளிவிட்டதாக தெரியவருகிறது. 

இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த முருகேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினார். இந்த தகவலை அறிந்த புளியங்குடி காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து முருகேசனின் உடலை மீட்டு புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள அதிகாரிகள், சுந்தரத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.