புளியங்குடி: கல்லூரி மாணவி இந்து பிரியா தற்கொலை விவகாரம்; பேராசிரியர், பேராசிரியை கைது.!

புளியங்குடி: கல்லூரி மாணவி இந்து பிரியா தற்கொலை விவகாரம்; பேராசிரியர், பேராசிரியை கைது.!



Tenkasi Puliyangudi College Girl Indhu Priya Suicide Case College Professor 2 Arrested

செய்யாத தவறுக்கு கல்லூரியில் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கியதால் மாணவி தற்கொலை செய்துகொண்ட நிலையில், வழக்கில் தொடர்புடைய பேராசிரியர் மற்றும் பேராசையை கைது செய்யப்பட்டுள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள புளியங்குடி, சிந்தாமணி மேலரத வீதியில் வசித்து வருபவர் கணேசன். இவரின் மனைவி மாடத்தி. இந்த தம்பதியின் மகள் இந்து பிரியா (வயது 18). இவர் புளியங்குடியில் செயல்பட்டு வரும் மனோன்மணியம் கல்லூரியில் பி.காம் முதல் வருடம் படித்து வந்துள்ளார். 

கணேசன் உயிரிழந்துவிட்ட நிலையில் மாடத்தி பீடி சுற்றுவதால் வருமானம் வருமானத்தை வைத்து குடும்பத்தை கவனித்து வருகிறார். நேற்று முன்தினம் மாணவி இந்து பிரியா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த விஷயம் தொடர்பாக புளியங்குடி காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

Tenkasi

விசாரணையில் அதிர்ச்சி திருப்பமாக, மாணவி எழுதி வைத்த 2 பக்க கடிதங்கள் கிடைத்தது. அந்த கடிதத்தில், நான் கல்லூரிக்கு செல்போன் எடுத்து செல்லவில்லை. ஆனால், நான் செல்போன் எடுத்து சென்றேன் என்று கூறி, என்னை கட்டாயப்படுத்தி பேராசிரியர் முத்துமணி, பேராசிரியை வளர்மதி மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கினர்.

மற்றொரு மாணவி செல்போன் எடுத்து வந்த நிலையில், செய்யாத தவறுக்கு என்னை திட்டி, கட்டாயப்படுத்தி எழுதி வாங்கிக்கொண்டார்கள். என்னை மரியாதை தெரியாத பெண் என்று கூறுகிறார்கள். பேராசிரியர் முத்துமணி பல மாணவிகளுக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பி இருக்கிறார். 

Tenkasi

நான் யாரையும் காதலிக்கவில்லை. காதல் தோல்வியால் தற்கொலை செய்யவில்லை. எனது மரணத்திற்கு காரணம் பேராசிரியர் முத்துமணி, பேராசிரியை வளர்மதி மட்டும் தான். அவர்கள் கல்லூரியில் இனி பணியாற்ற கூடாது. என்னைப்போல எதிர்காலத்தில் படிக்க வரும் மாணவிகளுக்கு எந்த தொல்லையும் நேர கூடாது" என்று தெரிவித்து இருந்தார். 

இதனால் கொதித்துப்போன உறவினர்கள் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து, காவல் துறையினர் மாணவியின் குடும்பத்தினரிடம் சமாதானம் பேசி சாலை மறியலை கைவிட வைத்தனர். 

Tenkasi

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, பேராசிரியர் முத்துமணி மற்றும் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தை சேர்ந்த பேராசிரியை வளர்மதி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.