தமிழகம்

#BigNews: கல்லூரி மாணவி தற்கொலை விவகாரத்தில், பேரதிர்ச்சியை தந்த 2 பக்க கடிதம்.. பரபரப்பு தகவல்.!

Summary:

#BigNews: கல்லூரி மாணவி தற்கொலை விவகாரத்தில், பேரதிர்ச்சியை தந்த 2 பக்க கடிதம்.. பரபரப்பு தகவல்.!

புளியங்குடி அருகே உள்ள கல்லூரியில் பயின்று வரும் மாணவி தற்கொலை வழக்கில், பரபரப்பு தகவலை தெரிவித்த கடிதம் கிடைத்துள்ளது. செய்யாத தவறுக்கு மாணவியை மன்னிப்பு கடிதம் எழுதச்சொலி, சக மாணவிகள் முன்னிலையில் அவமானப்படுத்திய இரண்டு ஆசியர்கள் செயலை கடிதத்தில் கண்ணீர் மல்க மாணவி தெரிவித்துள்ளார். மேலும், குறிப்பிட்ட ஆசிரியர் கல்லூரி மாணவிகளிடம் ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் பகீர் தகவல் கிடைத்துள்ளது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள புளியங்குடி, சிந்தாமணியை சேர்ந்தவர் மாடத்தி. இவரின் மகள் இந்து பிரியா (வயது 18). இவர் புளியங்குடி, டி.என். புதுக்குடி பகுதியில் செயல்பட்டு வரும் மனோன்மணியம் பல்கலை., கல்லூரியில் இளங்கலை முதலாம் வருடம் பயின்று வருகிறார். இந்நிலையில், இன்று காலை நேரத்தில் மகளை கல்லூரிக்கு அனுப்புவதற்கு, உறக்கத்தில் இருந்தவரை எழுப்ப தாய் மகளின் அறைக்கு சென்றுள்ளார். அப்போது, மகள் இந்து பிரியா தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்து அலறியுள்ளார். 

இதனைக்கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் இந்து பிரியாவின் உடலை கட்டிலில் இறக்கி வைத்தனர். பின்னர், இது தொடர்பாக புளியங்குடி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் பிரியாவின் உடலை தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள தொடங்கினர்.

இந்நிலையில், மாணவி எழுதி வைத்துள்ள தற்கொலை கடிதம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அந்த கடிதத்தில், "நான் தற்கொலை செய்வதற்கு காரணம், நான் படிக்கிற காலேஜில் பணியாற்றிவரும் பி.காம் டிபார்ட்மென்ட் முத்துமணி சார், வளர்மதி மேடம். நான் செய்யாத தவறை செய்தேன் என்று சொல்லி என்னை மன்னிப்பு கடிதம் எழுதி தருமாறு வற்புறுத்தினார்கள். 

நான் கல்லூரிக்கு செல்லும்போது செல்போன் ஏதும் எடுத்துச் செல்லவில்லை. ஆனால், நான் கொண்டு வந்தேன் என மன்னிப்புக் கடிதம் எழுதச் சொன்னார்கள். கல்லூரிக்கு செல்போன் கொண்டு வந்தது ராக் சத்யா என்ற மாணவி தான். அவரிடம் தான் மன்னிப்பு கடிதம் ஆசிரியர்கள் வாங்கியிருக்க வேண்டும். அவரை மன்னிப்பு கடிதம் எழுதச்சொல்லுங்கள் என்று முத்துமணி சாரிடம் நான் கேட்டதற்கு, அவர்கள் அந்த பெண்ணுக்கு ஆதரவாக செயல்பட்டார்கள். 

வளர்மதி மேடம் என்னை கல்லூரியில் வகுப்பறையில் அனைவரின் முன்னிலையிலும் திட்டினார்கள். நான் மன்னிப்பு கடிதம் எழுத முடியாது என்று கூறியதற்கு, செய்யாததை செய்ததாக ஒத்துக் கொள்ளச் சொல்லி வற்புறுத்தினார்கள். மேலும், என்னை என்னை மரியாதை தெரியாத பெண் என்று சொல்லி திட்டினார்கள். எனக்கு கஷ்டமா இருக்கு. முத்துமணி சார் காலேஜில் ஒரு சில பெண்களிடம் தப்பாகவும் மெசேஜ் செய்தார். கெஞ்சி கேட்டுக்குறேன் அவரை கல்லூரியில் இருந்து நீக்க வேண்டும். 

இனி படிக்க வரும் மாணவ - மாணவியர்களுக்கு இதுபோன்ற துயரங்கள் நடக்கக்கூடாது. எல்லாரும் மகிழ்ச்சியா இருக்கணும். அம்மா உன்னை விட்டு போறதுக்கு சாரி. ஐ லவ் யூ அம்மா. நீ வளர்த்த பொண்ணு மரியாதை இல்லாத பொண்ணு-ன்னு சொல்லிட்டாங்க. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. கங்கா ப்ளீஸ்மா. நான் செத்துப் போனதுக்கு காரணம் எல்லாருக்கும் தெரியணும். கங்கா லவ் யூ மா. ஹர்சனை நல்லா பாத்துக்கங்க. அவனை அடிக்காதீங்க. 

நாகராஜன் என் தம்பி. அவனை டாக்டருக்கு படிக்க வைங்க. அவன் ஆசைப்படி அவன் படிக்கட்டும். முத்துமணி சார் காலேஜ் விட்டு போகணும். நான் யாரையும் காதலிக்கவில்லை. காதலித்து அவங்க விட்டு போனதால வருத்தப்பட்டு நான் சாகவில்லை. நான் யாரையும் லவ் ஏதும் பண்ணவில்லை. எனது மரணத்திற்கு காரணம் முத்துமணி சார், வளர்மதி மேடம் தான். இப்படிக்கு உங்களின் அன்பானவள் இந்து பிரியா" என்று எழுதப்பட்டுள்ளது.  


Advertisement